தளபதி 64 -ன் புதிய அப்டேட்....!!!

This cinema news gives information about new update for thalapathy 64 - thalapathy 64in puthiya aptet

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

தளபதி 64 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்க்கார் படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல சாதனைகளையும் படைத்து பல கோடிகளை வசூல் செய்தது.

இந்நிலையில், மீண்டும் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தளபதி விஜயின், தளபதி 64 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிறுத்தை சிவாவும் விஜயும் இணைய உள்ள இந்த திரைப்படம் இந்த வருட ஆகஸ்டில் தொடங்கி 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.