என்டிஆர் பிறந்த நாள் பரிசாக ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்..!!

A new poster from the RRR movie has been released on the eve of Junior NDR's birthday.

ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை முடிந்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 38 வது பிறந்த நாளை கொண்டி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் அவருக்கு பரிசளிக்கும் வகையில், ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் படத்தில் அவர் நடிக்கும் கொமரம் பீம் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டர் வெளியீட பட்டுள்ளது.

unknown node