இன்று தமிழ்சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயந்தாரவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
unknown nodeதமிழ் சினிமாவில் ஐயாவில் அறிமுகமாகி இன்று அன்னார்ந்து பார்க்கும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தன்னுடைய சினி வாழ்வில் எத்தனை ஏற்றங்களோ அத்தனை சறுக்கல்களை சந்தித்து,அவற்றை எதிர்கொண்டு இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு தெரியாமல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு பரிசளித்துள்ளது படக்குழு.
உன்னைப்போல் ஒருவன்,பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன் ஹூரோயினியாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் என்ற படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக தகவல் வந்தது.
unknown nodeபடம் முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாக படக்குழு சொன்னார்கள். ஆனால் படத்தினை தெலுங்கு மற்றும் இந்தியில் நடிகை தமன்னா நடிகர் பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் கூறியது படக்குழு.
unknown nodeமேலும் நயன் நடித்த இந்த படம் வெளிவருமா என்று நடிகை நயன் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே தெரியும் என்றிருந்த நிலை நிலவிய நிலையில் படத்தின் இணைத் தயாரிப்பாளரான இசியயமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டது.இதனால் தற்போது படத்தை ‘செம போத ஆகாதே’ படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது.
unknown nodeநயன் நடித்த இந்த படத்தை வெளியிட தயாராகும் புதிய தயாரிப்பாளர் நிறுவனம் படத்தின் வியாபார சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.இந்நிலையில் நடிகை நயனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக புதிய டைட்டில் ஃபாண்டுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeDINASUVADU