36 வயதிலும் ரசிகர்களை கவரும் லுக்கில் நயன்தாரா.!வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

Some of the photos in the nizhal film starring Nayantara have gone viral on social media.The film also stars Kunchacko Bhoban .

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்திலுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதில் நிழல் படத்தின் படப்பிடிப்பை நேற்று முன்தினம் முடித்துள்ளார்.ஒளிப்பதிவாளரான அப்பு என் பட்டாத்திரி இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார்இந்த படத்தின் படப்பிடிப்பானது அக்டோபர் 19-ம் தேதி தொடங்கி ,45 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது . தற்போது இந்த படத்திலிருந்து நயன்தாராவின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.36 வயதிலும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ள நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node
36 வயதிலும் ரசிகர்களை கவரும் லுக்கில் நயன்தாரா.!வைரல் புகைப்படங்கள் உள்ளே.!