கணவருக்கு தொடர் சிக்கல்! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Nayanthara

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு  சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம்.

இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். இந்த படத்தின் தலைப்புக்கு எதிராக பிரச்சனை ஒன்றும் எழுந்தது. அது என்னவென்றால், LIC என்ற டைட்டிலை இயக்குனர் SS குமரன் என்பவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்து இருக்கிறாராம்.

READ MORE- சட்டுன்னு ஷாக் ஆயிடுச்சு…பிட் துணியில் கிக் ஏத்தும் சமந்தா.!

எனவே, விக்னேஷ் சிவன் அவருடைய படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று SS குமரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். தொடர்ச்சியாக இப்படி சிக்கலில் விக்னேஷ் சிவன் சிக்கி வருவதால் தற்போது அவருடைய மனைவி நயன்தாரா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

அது என்னவென்றால், தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை பல பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால் கேரளாவுக்கு அழைத்து சென்று இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட மலையாள மாந்திரிகளை வைத்து விக்னேஷ் சிவனுக்கு தோஷம் கழிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation