இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மன்மதலீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
unknown nodeஇந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை லான்ச் நேற்று நடைபெற்றது. இதில் வெங்கட் பிரபு, பிரேம் ஜி, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
unknown nodeஇதில் பேசிய பிரேம் ஜி ” இந்த படத்தில் நான் நடிக்கவில்லை… அதனால நான் மியூசிக் பண்ணிருக்கேன்…இந்த படம் நல்லா இருக்கும் கண்டிப்பா பாருங்க…ரொம்ப ஜாலியான படம்.. சிங்கிளா இருக்குறவங்க கண்டிப்பாக பாருங்கள்….தளபதியோட பீஸ்ட் ரிலீஸ் வரைக்கும் நாங்கதான்” என கூறியுள்ளார்.