நடிகை நமீதா தற்போது நடித்து வரும் திரைப்படம் “அகம்பாவம்”. நமீதா திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் இதுவாகும் .இப்படத்தில் கதாநாயகனாக வினோத், கதாநாயகியாக சமீரா சாய் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் நமீதாவின் கணவராக பிர்லா போஸ்சும் மேலும் இப்படத்தில் அப்புக் குட்டி, மனோபாலா, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் வாராகி வில்லனாகவும் ,படத்தை தயாரித்தும், இயக்கியுள்ளார் . இவர் இதற்கு முன் “சிவா மனசில புஷ்பா” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு அருணகிரி இசையமைக்கிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் முடித்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளனர்.