நடிகர் விக்ரமின் புதிய படம்....!!!

முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் நடித்துள்ள "தேர்ட் ஐ " என்ற மூன்றாம் விழிப்புணர்வு குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.

முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் நடித்துள்ள “தேர்ட் ஐ ” என்ற மூன்றாம் விழிப்புணர்வு குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.

வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் மூன்றாம் கண் என்கின்ற விழிப்புணர்வு குறும்படம் தற்போது உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெரி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், குறும்பட வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த குறும்படத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வெளியிட்டார்.

அப்போது பேசிய நடிகர் விக்ரம் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என்கிறார்.