இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் -செல்வராகவன் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
unknown nodeஇதுகுறித்து அவர் கூறுகையில் “ஒருநாள் தனுஷ் திடீரென ஒரு கதையை தயார் செய்து விட்டு என்னிடம் வந்தார். அந்த கதையை என்னிடம் கூறினார். எனக்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்தது.
unknown nodeஅந்த கதையை நானே இயக்கலாம் என முடிவு செய்தேன். அதுதான் “நானே வருவேன்”. இந்த படத்தின் கதை தனுஷுடையது திரைக்கதையை நான் இயக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.