பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த

bhavatharini

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில்,ஏ.ஆர்.ரஹ்மான்இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.

இதயம் நொறுங்கி சொல்றேன் – கண்ணீர் ததும்ப நடிகர் வடிவேலு இரங்கல்!

இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதனையடுத்து பவதாரிணி உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. இந்த இறுதி சடங்கில் பல்வேறு பிரபலங்கள் வருகை தனது தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தவுள்ளனர்.