பிரபல பெங்காலி தொலைகாட்சியில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்த நடிகை மவுமிதா சாஹா, நேற்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்,நடிகை மவுமிதா கடந்த சில நாட்களாக சினிமா துறையில் முயற்சித்து வந்துள்ளார் எனவும், வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது மரணம் தற்கொலை தானா..?? அவரது தற்கொலைக்கான காரணம் என்ன..?? என்று ஆராய, அவரது கைபேசி அழைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவரது அறையில் தற்கொலை குறித்த தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா எனவும், ஆராயப்பட்டு வருவதாகவும் அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விதசாரணை செய்து வருகின்றனர்!