உழைப்பாளர் தினத்தன்று லோக்கலாக களமிறங்க உள்ள சிவா!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் எனும் சொல்லும் அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் எனும் சொல்லும் அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேற்பு கிடைத்து வருகிறது .

இவரது நடிப்பில் கடைசியாக ‘சீமராஜா’  படம் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக கதாநாயகனாக களமிறங்க உள்ள திரைப்படம் ‘Mr.லோக்கல்’ . இந்த படத்தை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து வருகிறது . இந்நிலையில் நேற்று இப்படம் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

DINASUVADU