#One Last Time : ரசிகர்களுக்கு கச்சேரி வைத்த விஜய்...வெளியானது ஜனநாயகன் முதல் பாடல்!

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

ThalapathyKacheri song out now

சென்னை :நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் 2026 வெளியீடாக உறுதியாக அடுத்தாண்டு ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, எடிட்டிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர்.

படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று (நவம்பர் 8) வெளியாகியுள்ளது. முன்னதாக தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்பாடல், கரூர் சம்பவத்தால் ஒத்திவைக்கப்பட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அனிருத் இசையில், வைகோம் விஜயலட்சுமி பாடிய இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #ThalapathyKatcheri, #JanaNayaganFirstSingle என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும், அரசியல்-ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் இறங்கி, தமிழக வெற்றிக் கழகத்தை வழிநடத்த உள்ளார்.‘ஜனநாயகன்’ படத்தின் டீசர், டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கல் ரிலீஸாக வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருகின்றனர். #JanaNayaganPongal2026 என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

unknown node