லோகேஷ் – ரஜினி காம்போ ஒர்க் அவுட் ஆனதா? நெட்டிசன்கள் சொல்வதென்ன? கூலி டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். பெரிய ஹைப்புக்கு மத்தியில்

Featured image

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். பெரிய ஹைப்புக்கு மத்தியில் கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் உபேந்திரா போன்ற நட்சத்திரங்கள் நிறைந்த, பான்-இந்திய துணை நடிகர்கள் உள்ளனர். படம் பார்வையாளர்களைக் கவர்ந்ததா? ட்விட்டர் விமர்சனங்களைப் பார்ப்போம்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், தலைவர் மாஸ், அனிருத் பாட்டு தெறி என்றெல்லாம் கொண்டாடி கொளுத்தினாலும், ஆமிர்கான் கேமியோ உள்பட பல கேரக்டர்கள் இருந்தாலும், ஒற்றை ஆளாக ‘கூலி’யை சுமக்கிறார் ரஜினி. சௌபின் ரோல் மனதில் நிற்கிறது.

ரஜினியின் சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி அபாரம். விண்டேஜ் லுக்கும் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. அனிருத்தின் மியூசிக் பக்கபலம். ஆனால், மற்ற கேரக்டர்களுக்கான அழுத்தம் குறைவாக உள்ளதால், ஆக்ஷன் படத்தில் வேகம் இல்லை. கூலி படத்திற்கான டிவிட்டர் விமர்சனத்தை வைத்து பார்க்கும்போது, பெரும்பாலான பார்வையாளர்களும் ரசிகர்களும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் சிலர் அதில் உள்ள சிறிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node