#BREAKING: சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தாயார் மனு..!

Her mother has filed a petition seeking transfer of the case related to the death of iconic actress Chitra to the CBCID.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது தாயார் மனு கொடுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த விசாரணையின்போது, சித்ராவின் பெற்றோர், ஹேம்நாத் தரப்பு, நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், விசாரணை தொடர்ந்து அதற்கான அறிக்கையையும் காவல்துறையிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய், தனது மகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சித்ராவின் தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கடந்த 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.