தெலுங்கில் ரீமேக்காகும் மோகன்லாலின் 'லூசிபர்'.!இயக்குநர் இவர் தானா.?

It is said that Chiranjeevi is in talks to direct the Telugu remake of the Malayalam mega hit movie Lucifer starring Chiranjeevi.

மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் .அந்த வகையில் அவர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான நண்பன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது .தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

தற்போது இயக்குனர் ஷங்கருக்கு ரீமேக் படம் ஒன்றை இயக்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளது .அதாவது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் வசூல் அளவில் சாதனை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டித்தது . சமீபத்தில் இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும்,அதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது .இந்த படத்தினை இயக்குவதற்காக மோகன்ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .இதற்கு ஷங்கர் ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.