அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எடிட் செய்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எடிட் செய்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown node