கைதியை தொடர்ந்து சுல்தானாக மிரட்ட வருகிறார் கார்த்தி.... டிரைலர் குறித்த அப்டேட்..!!

The film crew has now announced the release date of the trailer of the movie Sultan

சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்திற்கான டிரைலர் வருகின்ற 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node