மாஸ் + கிளாஸ் மிரட்டும் அஜித்... "துணிவு" படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் "துணிவு" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண்,

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

unknown node

தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா பணியாற்றி வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

unknown node

போஸ்டரில் அஜித் கெத்தான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமானது. இதனையடுத்து பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தொடர்ந்து இரண்டாவது லுக் போஸ்டரும் தற்போது வெளியீடபட்டுள்ளது.

unknown node

இந்த போஸ்டரில் மிகவும் கெத்தான லுக்கில் இருக்கிறார். முதல் லுக் போஸ்ட்டரை விட இரண்டாவது லுக் போஸ்டர் அருமையாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் அனைவரும் அருமை அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node