எஸ்.பி.பி குரலில் மரண மாஸ்..! பேட்ட சிங்கிள் டிராக்....!!வெளியாகியது அதிகாரபூர்வ தகவல்..!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட  படமானது பொங்கலுக்கு ரிலீஸ்க்கு வருகிறது. படத்தை சன்பீக்சர்ஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட  படமானது பொங்கலுக்கு ரிலீஸ்க்கு வருகிறது.படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்நிலையில் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை த்ரிஷா,நடிகை சிம்ரன் நடித்து வரும் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

அதில் படத்தின் மரண மாஸ் பாடலின் சிங்கிள் டிராக் வரும் 3 தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பாடல் குத்துப் பாட்டாக இருக்கும் என்ற தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,அதில் குத்து பாடலுக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.விவேக் பாடலை எழுதியுள்ளார்.இயக்குநரின் இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எஸ்.பி.பி குரலில் மரண மாஸ்..! பேட்ட சிங்கிள் டிராக்....!!வெளியாகியது அதிகாரபூர்வ தகவல்..!!