குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மணிமேகலை அனுபவித்த வலிகள் பற்றிய உண்மையை வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த விவகாரம் எப்போது முடியும் என்பது தான் பலருடைய கேள்வியாகவும் இருந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் தனக்கு தோணும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாகக் கலந்துகொண்டபோது மக்களைச் சிரிக்க வைக்க வேதனைப்பட்டு அதனை வெளியே காட்டாமல் மறைத்த விஷயங்கள் பற்றிப் பேசியுள்ளார். அவர் பேசியதைக் கேட்கும்போதே மணிமேகலை நிகழ்ச்சி மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்து இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
பேட்டியில் பேசிய வெங்கடேஷ் பட் ” என்னைப் பொறுத்தவரை மணிமேகலை தங்கமான பொண்ணு…அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த நடிகை. அதற்கு உதாரணமாகச் சொல்லலாம் என்றால் அவர் நயன்தாரா போலக் கெட்டப் போட்டு நடித்தது, பீம் கெட்டப் போட்டு நடித்தது அப்படியே நிஜமாகவே இருக்கும். இந்த கெட்டப்களில் அவருடைய நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் பட் மணிமேகலை நிகழ்ச்சியில் அனுபவித்த வேதனைப் பற்றியும் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” ஒரு சீசன் நான் பெரிய பந்தை எட்டி உதைத்தேன். அந்த பந்து வேகமாகச் சென்று மணிமேகலை முகத்தில் பட்டுவிட்டது. பந்து பட்ட வேகத்தில், அந்த பொண்ணு வேகமாகக் கீழே விழுந்துவிட்டால்.
இந்த சம்பவத்தில் அவருக்கு ரொம்பவே அடிபட்ட காரணத்தால் நான் அதிகமுறை சாரி கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த பொன்னும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வலியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அடுத்த எபிசோடுக்கு தயாரானதாகவும்” வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளதைப் பார்த்த மணிமேகலை ரசிகர்கள் இவ்வளவு வலியைத் தாங்கிக்கொண்டு அதனை வெளியே காட்டாமல் இருந்திருக்கிறார் என்றால் நிகழ்ச்சியை அவர் அந்த அளவுக்கு விரும்பி இருக்கிறார். அப்படி இருந்தவரே நிகழ்ச்சியை விட்டுக் கிளம்பி இருக்கிறார் என்றால் அந்த அளவுக்கு அவருக்கு வேதனை சம்பவங்கள் நடந்திருக்கிறது எனவும் பேசி வருகிறார்கள்.