சர்ச்சையில் சிக்கிய மம்மூட்டியின் கதாபாத்திரம்...கடைசியில் நடந்த மாற்றம்!

மம்முட்டி மற்றும் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் பிரம்மயுகம். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த்

Mammootty - Bramayugam

மம்முட்டி மற்றும் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் பிரம்மயுகம். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமண்டா லிஸ், மணிகண்டன் ஆச்சாரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, ஷெஹ்னாத் ஜலால் படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரம்மயுகம் இன்று (பிப்ரவரி 15ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரத்திற்கு ‘குஞ்சமோன் பொட்டி’ என பெயரிடப்பட்டிருந்தது. இதற்கு பிராமண அமைப்பு ஒன்று “இது தங்களைப் பற்றி அவதூறுப் பரப்புவது போல் இருப்பதாக” கேரள மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

இதனையடுத்து, கடைசி நேரத்தில் மம்மூட்டியின் கதாபாத்திர பெயர் ‘கொடுமோன் பொட்டி’ என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய மம்முட்டி,நெகட்டிவ் கதாபாத்திரம் கொண்ட தனது கதாபாத்திரம் குறித்து விவரித்தார். அதாவது, “பிரமயுகத்தில் ஹீரோக்களோ வில்லன்களோ இல்லை, அதற்கு மாறாக கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக” கூறினார்.