மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் மக்கள் செல்வன்..!

Actor Vijay Sethupathi next flim is all set to star in a new film fordirected by Director Karthik Supuraj.

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேரடியாக தயாரிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் இருந்து கார்த்திக் சுப்புராஜ் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தனது நெருங்கிய நண்பரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுக்க உள்ளாராம், இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் நிறுவனமே தயாரித்து அவரே உள்ளதாகவும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவு ள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.