"ரஜினிமுருகன்" பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் மக்கள் செல்வன் .? தயாரிக்கும் பிரபல நிறுவனம் .!

It is said that Vijay Sethupathi will play the next director in the Rajinimurugan film Ponram directed by Sun Pictures.

ரஜினிமுருகன் பட இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் ,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இந்த நிலையில் இவர் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனரான பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும்,அது விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் ,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் , விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.