விக்ரம் & துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இனைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியீடப்பட்டது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடக்கவுள்ளது.
இந்த நிலையில் அடுத்த அப்டேட்டாக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்க்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
unknown node