மகான் படத்தின் “சூறையாட்டம்” பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் மற்றும் துருவ் விக்ரமுடைய போஸ்டர் ரீல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
unknown nodeஇந்நிலையில், மகான் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் பாடலுக்காக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
unknown node