தீபாவளி போட்டியில் களமிறங்கும் மகான்.?!

விக்ரம் - துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் தீபாவளிக்கு வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்.

விக்ரம் – துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் தீபாவளிக்கு வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இதனையடுத்து தற்போது இந்த படம் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மகான் படத்தை வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

ஏற்கனவே தீபாவளி அன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.