ஹாரர் வில்லனாக மிரட்டும் மாதவன்…’ஷைத்தான்’ த்ரில் ட்ரைலர்.!

Shaitaan Trailer

இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட்  நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார்.

படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க ஹாரர் நிறைந்து காணப்படுகிறது. படத்தின் கதை சூனியம் மற்றும் வசீகரம் அடிப்படையாகக் கொண்டது.

அதாவது, அஜய் தேவ்கனும் ஜோதிகாவும் தங்கள் மகளுடன் வசிக்கும் அமைதியான வீட்டிற்குள் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் பொழுது ஷைத்தானோட ஆட்டம் தொடங்குகிறது. ஜோதிகாவின் மகளை மாதவன் வசிய செய்து அவர் சொல்வதை செய்வது காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

READ MORE – சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி!

இது, ஷைத்தான் வாஷ் என்ற குஜராத்தி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

READ MORE – ராயன் முதல் சியான் 62 வரை….எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லைன் அப்!!

ஜியோ ஸ்டுடியோஸ், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் வழங்கும் இந்தப் படத்தை தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்