இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்.
unknown nodeஅடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்கே சுரேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், கோபத்துடன் எத்தனை நாட்கள் தான் நங்கள் படத்தை பார்க்க காத்திருப்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா யுவன் இணைந்து இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇதுகுறித்து ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதியை மே 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 24 ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறது ஸ்டுடியோ9 திரைப்படம் . தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 400 திரையரங்குகளை நடத்த மாமனிதன் தகுதியானவர். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரிடமும் எங்கள் மனப்பூர்வமான மன்னிப்பு” என பதிவிட்டுள்ளார்.
unknown node