தாறுமாறாக வசூல் செய்யும் "லவ் டுடே".! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?

தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம்

தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார்.

unknown node

LoveToday Movie Poster [Image Source: Twitter ]

ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். விமர்சனங்கள் எப்படி வரும் என்பதையெல்லாம் பற்றிக்கவலை படாமல் படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

unknown node

LoveToday Review [Image Source: Twitter ]

படத்தில் வரும் காமெடி காட்சிகள், மற்றும் காதல் காட்சிகள் இன்றயை காலத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கான வசூலும், வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

unknown node

LoveToday Movie Poster [Image Source: Twitter ]

இந்த நிலையில், படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.