நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் கலந்து கொண்டார். முகனை பொறுத்தவரையில், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இந்நிலையில், முகன் ரசிகர்கள், முகனுக்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகிற நிலையில், முகன், கமலஹாசனிடம் ‘அன்பு ஒன்று தான் அனாதை’ என்று கூறிய வார்த்தை அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இவர் கூறிய இந்த வாக்கியம் பலராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிற நிலையில், இந்த வாக்கியத்தை பயன்படுத்தி ஒரு டீசர்ட் வெளியிட்டுள்ளனர்.
unknown node