விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown node110 நாட்கள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிந்ததை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
unknown nodeவீடியோவில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் இருந்தனர், இதில் ஃபகத் பாசில் துப்பாக்கி வைத்து சுடுவதும் லோகேஷ் கனகராஜ் ஆரம்பிக்கலாமா என்று சொல்வதும் போல் காட்சி இடம் பெற்றுள்ளது.
unknown node