ஆண்டவரின் சம்பவம்...காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த லோகேஷ் – ஸ்ருதி காதல்.!

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'Inimel'என்ற ஆல்பம் பாடல் வெளியானது.

Inimel

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது.

நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது.

unknown node

சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி பாடலுக்கான வரவேற்பு மிகுந்த அளவில் கிடைத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் காதல் எப்படி உள்ளதோ, அதனை சித்தரிக்கும்படி இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலின் தொடக்கம் காதல் என்ற மாய வலையில் விழும் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் நகர காலகட்ட காதல் திருமணம் வரை சென்று நாளைடைவில் சண்டையில் தொடங்கி விவாகரத்ததில் முடிகிறது.

இனிமேல்

‘இனிமேல்’ படத்தை துவாரகேஷ் பிரபாகர் இயக்குகிறார், இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ‘RKFI’ இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே இந்த இசை வீடியோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது .