டிக்கிலோனா படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு டிக்கிலோனா ஒரு சிரிப்பு விருந்து தந்துள்ளது.. குறிப்பாக மாறன் மற்றும் மருத்துவமனை குழு வாழ்த்துக்கள்.. சந்தானம் சார் கலக்கிட்டீங்க” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.