Atlee: இயக்குனர் அட்லீயின் அடுத்த இயக்கம் குறித்து நேற்றிரவு முதல், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் அட்லீ தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள வீடியோ மூலம் இந்த செய்தி பரவ தொடங்கியது.
READ MORE –அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்!
அதாவது, அட்லீ இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘Pushpa 2 The Rule’-க்கு பிறகு தொடங்குவதாகவும் ஸ்கிரிப்ட் விவாதம் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
READ MORE –என்னங்க இது! இன்னும் எத்தனை பேரு தான் இருக்காங்க? கோட் படத்தில் இணைந்த த்ரிஷா!
இந்த நிலையில், அட்லீ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் #A6 என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், கதையை கேட்டுக்கொண்டு தனது மகன் மீரிடம் ஒகே வா என்று கேட்டு நக்கலாக பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் அட்லீயின் மனைவி ப்ரியாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
