கவின் நடிப்பில் 'லிப்ட்' – டப்பிங் பணிகளை முடித்த ஹீரோ.!

கவின் நடித்து வரும் லிப்ட் படத்தில் அவருக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கவின் நடித்து வரும் லிப்ட் படத்தில் அவருக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின், தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் லிப்ட் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .இந்த நிலையில் கவின் லிப்ட் படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். விரைவில் படத்தின் டீசர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் நடிப்பில் 'லிப்ட்' – டப்பிங் பணிகளை முடித்த ஹீரோ.!