தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கிறார்கள்.
unknown nodeஇப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் ஹீரோவாகவும், ராகவா லாரன்ஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது சகோதரர் எல்வின், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇந்தப்படத்தில் மேலும் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ராகவலரன்ஸ் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.