புரட்சி தளபதியின் 'லத்தி' திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ...

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும்

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

Laththi [Image Source: Google ]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் கலவையான விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-வாரிசு படத்தில் விஜய்யின் ஹிட் பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

unknown node

Laththi From Today [Image Source: Twitter ]

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் கூறியுள்ள விமர்சன பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” லத்தி திரைப்படம் அருமையாக இருப்பதாகவும், படத்தில் விஷால் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

unknown node

Laththi [Image Source: Twitter ]

மற்றோருவர் ” படம் ரொம்பவே சூப்பராக இருப்பதாகவும், கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார். மற்றோருவர் ” லத்தி திரைப்படம் பெரிதாக தன்னை ஈர்க்கவில்லை என்றும், விஷாலின் அர்ப்பணிப்பு நன்றாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node