நடிகர் விஷால் அடுத்தாக லத்தி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்புகள் உள்ளது என்றே கூறலாம்.
unknown nodeLaththiTrailer [Image Source: Google ]
இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். தெறிக்கும் ஆக்சன் காட்சிகள் விஷால் பேசும் வசனங்கள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன்-எனக்கு வரலட்சுமிக்கு காதலா..? முதல் முறையாக மனம் திறந்த விஷால்.!
Here we go, proudly presenting #LaththiTrailer
▶️ https://t.co/aUBMsRT5yf#Laththi #LaththiFrom22ndDec
— Vishal (@VishalKOfficial) December 12, 2022
இந்த அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.