தளபதி 65 படத்திற்கான லேட்டஸ்ட் அப்டேட்..!!

It has been reported that the shooting for the film thalapathy 65 will start in Chennai after the election.

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடிந்தபிறகு சென்னையில் வைத்து  தொடங்கவுள்ளதாக தகவல்.

விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடித்து வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில், பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.