லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! மிரள வைக்கும் "நெற்றிக்கண்" டீசர்.!

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் .

இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் . தனது அறிவை பயன்படுத்தி கொலை செயய்யும் சீரியல் கில்லரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை .

இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் படத்தின் போஸ்டருடன் இன்று டீசர் வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதன்படி நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.மிரள வைக்கும் திரில்லர் கதை களத்துடன் வெளியான நெற்றிக்கண் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node
லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! மிரள வைக்கும் "நெற்றிக்கண்" டீசர்.!