இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில் சிவகங்கையை சேர்ந்த இளம் நடிகர் குட்டிமணி நடிப்பில் வெளியான படம் “மேதகு”. விடுதலை புலி தலைவைரான ‘பிரபாகரன்’-னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
unknown nodeஇந்த படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டிமணி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 25 ‘பிளாக் ஷீப்’ தேதி என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
unknown nodeஇந்நிலையில், நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற விருது விழாவில், மேதகு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் குட்டிமணிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown node