பாகுபலி போல இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். அதிகம் அலட்டிகொல்லாமல் வெளியாகி பின்னர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.
unknown nodeபாகுபலி போலவே இதிலும் பாதி படமே முடிவடைந்து இருக்கும். மீதி இரண்டாம் பாகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் 2020இல் வெளியாவதற்கான வேளைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
unknown nodeமுதல் பாகத்தில் முதன்மை வில்லனாக காட்டப்பட்ட அதிரா, கடைசி வரை முகத்தை காட்டாமல் இருப்பான். தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல அந்த அதிரா பாத்திரத்தின் போஸ்டரை திங்களன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அன்றுதான் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.