கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றது.
unknown nodeஇப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடத்து வருகிறார்.
இப்படத்தின் செட் அமைக்கும்போது, சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுத்துவதாகவும், அதிக பாதிப்பை விளைவிப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் இப்பட ஷூட்டிங்கிற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.