தளபதி விஜய்யுடன் இணையும் கேஜிஎப் இயக்குனர்..?

It is rumored that Commander 67 or 68 will be directed by Prasad Neil

தளபதி 67 அல்லது 68 படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் 66வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்கள் இயக்குவது உறுதியவிட்டது. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விஜயின் 67 வது படம் அல்லது 68 வது படத்தை கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாத் நீல் இயக்கவுள் ளதாகவும் அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.