மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..!!

It has been reported that actress Keerthi Suresh will be paired with Vijay in thalpathy 67.

விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்றும் லலித் குமார் தயாரிக்கிறார் ஏன்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விஜயின் 67 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பைரவா, சர்கார் போன்ற படங்களில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..!!