6 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த 'காட்டுப்பயலே' பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

unknown node