நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இதில் விருமன் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeபோஸ்டரில் கார்த்தி இதற்கு முன்பு நடித்திருந்த சிறுத்தை படத்தின் கெட்டப்பில் இருகுகிறார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.