காரத்தி பட நடிகையின் தந்தை காலமானார்.!

Popular Malayalam actress Nikhila Vimal who starred in Karthi's brother,her father MR Pavithran has passed away.

பிரபல மலையாள நடிகையும் ,கார்த்தியின் தம்பி படத்தில் நடித்த நிகிலா விமலின் தந்தை எம்ஆர் பவித்ரன் காலமானார்.

கடந்த 2009-ம் ஆண்டு “பாக்கியதேவதா” எனும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிகிலா விமல் . அதனையடுத்து பல மலையாள படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நிகில் தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஜோடியாக “வெற்றிவேல்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் . அதனையடுத்து கிடாரி,கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார் .அடுத்ததாக நிகிலா விமல் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியருடன் இணைந்து “தி பீரீஸ்ட்” படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரது தந்தையான எம்ஆர் பவித்ரன் காலமாகியுள்ளார்.பரியராம் மருத்துவ கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிகிலாவின் தந்தை இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவரின் இறுதி சடங்கு இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.காலமான பவித்ரன் புள்ளிவிவர துறையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிபிஐ (எம்எல்)-ல் மாநில இணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.