கமர்ஷியல் படத்தில் ஜிப்ஸி பட இயக்குனருடன் இணையும் கார்த்தி.!

It has been reported that actor Karthi will next play the role of gypsy film director Rajamurugan.

நடிகர் கார்த்தி அடுத்ததாக ஜிப்ஸி பட இயக்குனரான ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிட உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தியின் அடுத்த படத்தை ராஜுமுருகன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் இதுவரை சமூக அக்கறையுடன் கூடிய குக்கூ,ஜோக்கர்,ஜிப்ஸி உள்ளிட்ட தரமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக கார்த்தியை வைத்து பக்கா கமர்ஷியல் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமர்ஷியல் படத்தில் ஜிப்ஸி பட இயக்குனருடன் இணையும் கார்த்தி.!